
கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 25 சதவீத வரி ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தல் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு மெக்சிகோவும் கனடாவும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.