Friday, February 6, 2026 8:50 pm
பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் இன்று விருப்ப மனு பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் கட்சி தொண்டர்கள் அதிமாக சூழ்ந்துள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப்பகுதி மக்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”இங்கே பாருங்க காரை நினைத்த இடத்தில் பார்க் பண்றாங்க. சாப்பிட்டுட்டு குப்பையை ஃபுல்லா போட்டுட்டு போறாங்க. இங்கு குடியிருக்கும் மக்களை இப்படி போகாதீங்க அப்படி போகாதீங்க என்கிறார்கள். எங்க கார் வந்தால் விட மாட்டேன் என்கிறார்கள். இதுக்கு மேல இல்லாமல் எதைக் கேட்டாலும் சண்டை போடுகிறார்கள். எதை சொன்னாலும் நகர மாட்டேன் என்கிறார்கள். என்னமோ பெரிய இது மாதிரி நீங்க பாட்டுக்கு சொல்லுங்க எங்களுக்கு கவலை இல்லைன்னு சொல்கிறார்கள்.
6 வது அவென்யூவில் இருந்து 11 வது அவென்யூ வரை தவெக வினரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொலிஸில் புகார் செய்தும் பலனில்லை என்கிறார்கள் பனையூர் மக்கள்.
பொதுமக்கள் பேட்டி கொடுத்தபோது அந்த பகுதியில் இருந்த சில தவெக கட்சி தொண்டர்களுக்கும் குடியிருப்பு வாசிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

