இந்த அரசாங்கம் வாழ்க்கைச் செலவை மட்டுமே அதிகரித்துள்ளது என்று பொரளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அங்கு மேலும் உரையாற்றுகையில்,
‘தற்போதைய அரசாங்கம் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? ஒரு கணம் நின்று, இன்று மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் பற்றி சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் அதிகரித்துள்ள ஒரே விஷயம் வாழ்க்கைச் செலவு மட்டுமே’ என்றார்.
‘அரசியல் வெற்றியைப் பெறுவதற்காக அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பொய்களைச் சொன்னார்கள். பொதுமக்களை ஏமாற்றினார்கள்.’
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் நிர்க்கதியாகிவிட்டது.