Sunday, March 2, 2025 11:35 am
தபால் துறை அலுவலக உதவியாளர் ஒருவர் 11,000 ரூபலஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கவேண்டும்.
மீரிகமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இந்த தீர்ப்பை வழங்கினார்.
மத்திய தபால் பரிமாற்றத்தின் சர்வதேச விரைவுப் பிரிவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி கேமராக்களை வரியின்றி விடுவிக்க அலுவலக உதவியாளர் லஞ்சம் கோரியதாகப் புகார் செய்யப்பட்டது.
நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் அலுவலக உதவியாளருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
5000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பணத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பளித்தார்.

