ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அனுரா குமார திஸநாயக்கவினல் இன்று திங்கட்கிழமை [17] சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டதின சில முக்கிய அம்சங்கள். மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் – ரூ. 4,990 பில்லியன்
மொத்தச் செலவு – ரூ. 7,190 பில்லியன்
பட்ஜெட் பற்றாக்குறை – ரூ. 2,200 பில்லியன்
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1,700 ஆக உயர்த்த அரசாங்கம் தலையிடும்.
பொது சேவையில் உள்ள அத்தியாவசிய காலியிடங்களை நிரப்ப ரூ.10,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் அத்தியாவசிய பொது சேவைப் பணிகளில் 30,000 பேரை பணியமர்த்துவதற்கான ஒரு மூலோபாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் ரூ.1,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
மீள்குடியேற்றத்திற்காக ரூ.1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.
நாட்டிற்கு சிறப்பு பங்களிப்பு செய்யும் கலைஞர்களுக்கும்,பத்திரிகையாளர்களுக்கும் சீன அரசாங்கத்தின் நிதியுடன் கொட்டாவையில் ஒரு வீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடன் தீர்ப்பனவுக்காக ரூ. 20 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே தற்கொலை விகிதத்தை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கான இடைக்கால திட்டத்தை செயல்படுத்த ரூ.250 மில்லியன் ஒதுக்கப்படும்.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 250,000 ரூபாயிலிருந்து 1 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தற்போதுள்ள 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக அரசாங்கம் 185 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
தனது வரவு செலவுத் திட்ட உரையை நிறைவு செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கம் நீதியை உறுதி செய்யும் என்றும், அனைவரும் லஞ்சம் வாங்க பயப்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்த அரசாங்கம் தனது பதவிகளில் உள்ளவர்களிடையே ஊழலைப் பொறுத்துக்கொள்ளாது என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, லஞ்சம் பெற முயற்சிப்பவர்கள் பயப்பட வேண்டும் என்றார்.