இலங்கை கிறிக்கெற்றின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க, ஆப்கான் வீரர் ரஷீட்கானை மிஞ்சி ரி20 யில் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சர்வதேச கிறிக்கெற்றில் அறிமுகமான வனிந்து ஹசரங்க, டெசர்ட் வைபர்ஸ் அணிக்காக இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் விளையாடி வரும் அவர் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் ரி20 கிரிக்கெட்டில் 300 விக்கெற்களை அதிவேகமாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகின் தலைசிறந்த ஸ்பின்னராக பார்க்கப்படும் ரஷீத் கான் தனது 213-வது போட்டியில் தான் 300 விக்கெற்களை வீழ்த்தியிருந்தார்.