வட்டுக்கோட்டை – மூளாயில் நடைபெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ,இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்னர்.
தனிநபர்களுக்கிடையில் நேற்று மாலை நடைபெற்ற மோதல் குழு மோதலாக மாறியது. இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதல் நடத்தினர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. பொலிஸுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதால் அதனைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடைபெற்றது
இதனால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.அதனையடுத்து ஒரே குழுவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மூளாயில் இடம்பெற்ற குழு மோதல் மீண்டும் இடம்பெறலாம் என்பதால் அங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பாதுகாப்புக்காக பலப்படுத்தப்பட்டுள்ளனர்.