Tuesday, February 11, 2025 10:48 am
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமிய வீதிகளை மேம்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த முயற்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் 1,500 கிலோமீற்றர் வீதிகளையும், கிழக்கு மாகாணத்தில் 500 கிலோமீற்றர்களையும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவையும் உள்ளடக்கி அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

