2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ளது.
பல விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஏற்பாட்டாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர். கிரிக்கெட் போட்டி ஜூலை 12, 2028ஆம் திகதி தொடங்கும், பதக்கப் போட்டிகள் ஜூலை 20 , 29 ஆம் திகதிகளில் நடைபெறும்.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி ரி20 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கிரிக்கெட் கடைசியாக 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்றது. இதுவரை நடந்த ஒரே கிரிக்கெட் போட்டி இதுதான்.
கலிபோர்னியாவின் பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் கிறிக்கெற் போட்டிகள் நடைபெறும். இந்த மைதானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்திலிருந்து கிட்டத்தட்ட 48 கி.மீ தொலைவில் உள்ளது.