Wednesday, April 8, 2026 4:19 pm
லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான “போர்,தரைவழி நடவடிக்கைகள்” தொடர்வதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் புதன்கிழமை தெரிவித்த நிலையில், தெற்கு நகரமான டயரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானுடனான இரண்டு வார கால போர் நிறுத்தம் “லெபனானை உள்ளடக்கவில்லை” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்றிரவு கூறினார். இருப்பினும், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் கீழ் லெபனான் நாடு அடங்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) புதன்கிழமை காலை லெபனானில், டயர் நகரம் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்கள் உட்பட பலரை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது.

