Sunday, April 5, 2026 5:33 pm
ஐபிஎல் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 141 ஓட்டங்கள் எடுத்தது. அப்துல் சமாத் 36 மிட்செல் மார்ஷ் 35 ஓட்டங்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் காயத்தி இருந்து மீண்ட நடராஜன் சிறப்பாகப்ப் பந்து வீசி நடராஜனும், . லுங்கி இங்கிடியும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
142 ஓட்டங்களை விரட்டிய டெல்லி 4.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 26 ஓட்டங்கள் மட்டும் எடுத்துத் தடுமாறியது. கே.எல்.ராகுல், நிதிஷ் ராணா, பதும் நிசங்க, அக்சர் படேல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 5-வது விக்கெட்டுக்கு இணைந்த சமீர் ரிஸ்வி ,ஸ்டப்ஸ் ஜோடி, 119 இணப்பாட்டம் எடுத்து அணியைக் காப்பாற்றியது.
. இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 17.1 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி. சமீர் ரிஸ்வி, 47 பந்துகளில் 70 ஓட்டங்களும், ஸ்டப்ஸ், 32 பந்துகளில் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.
டெல்லி அணிக்காக சமீர் ரிஸ்வி, இம்பாக்ட் வீரராக விளையாடி இருந்தார். இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றிருந்தார்.
.

