பத்திரிகையாளர், ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் சமூக ஆர்வலர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி தாயார் டாக்டர் மனோராணி சரவணமுத்து முன்னிலையில் அரசு ஆதரவுடன் கூடிய கொலைக் குழுவால் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டௌ அவரது உடல் கடலில் வீசப்பட்டது.