சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேதாஜியின் இறந்த திகதி குறித்த தகவலை வெளியிட்டார்.
அந்த பதிவில் அவர் ’மகத்தான புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு இதயபூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். அவரது தலைமை, தைரியம், சமூக நீதி போராட்டம் ஆகியவை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம் அளிக்கிறது.
மேலும், நேதாஜியின் படத்துடன் அவரது வாழ்நாள் “ஜனவரி 23, 1897 – ஓகஸ்ட் 18, 1945” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நேதாஜியின் இறந்த திகதி 1945 ஓகஸ்ட் 18 என்று குறிப்பிட்டதற்கு பாஜக காட்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.