ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திங்களன்று நாட்டின் ஆயுதப் படைகளுக்கு 2026 முதல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதைத் தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கான அனைத்து சீருடைகள் ,பிற ஆடைப் பொருட்களையும், நாட்டிற்குள் உற்பத்தி வசதிகளைக் கொண்ட ரஷ்ய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும்.2027 ஆம் ஆண்டளவில், இந்தத் தேவை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் துணிகள் ,பின்னலாடைப் பொருட்களுக்கும் நீட்டிக்கப்படும், அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும்.
இராணுவத்தின் தேவைகளுக்காக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதை முற்றிலுமாக விலக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ உடைகள் , உபகரணங்களில் சீருடைகள், சின்னங்கள், உள்ளாடைகள், படுக்கை, சிறப்பு ஆடைகள், காலணிகள், உபகரணங்கள், சுகாதாரப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய பொருட்கள் ரஷ்ய அரசு பாதுகாப்பு உத்தரவு அமைப்பு மூலம் வாங்கப்படுகின்றன.
Trending
- இரயில் டிக்கெட் மோசடி தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் அமைச்சர் – பிமல்
- இராவணன் மறைத்துவைத்த விமானங்களை தேடும் முயற்சி ஆரம்பம்
- கொழும்பில் 20வது சர்வதேச இரட்டையர் ஆய்வு சங்க மாநாடு
- மட்டக்களப்பில் இரயில் மோதி இளைஞன் பலி
- சுற்றுலா சாரதி உரிமத் திட்டம் உள்ளூர் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது – நாமல்
- வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உதவி திட்டம் முன்னெடுப்பு
- மொரட்டுவையில் ஆறு குழந்தை தொழுநோயாளிகள் கண்டுபிடிப்பு
- ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர பதவி நீக்கம்