உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா ,ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி அரேபியாவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கும், – அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் டஷ்யா உற்சாகம் அடைந்துள்ள அதேவேளையில், அமெரிக்காவை நம்பிய ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பான நடவடிக்கையை முன்னெடுக்க தனித்தனியாக உயர்மட்ட அளவிலான குழுக்கள் அமைக்க ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இதுபற்றி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையி்ல, ‛‛இந்த சந்திப்பில் மூன்று முக்கிய விஷயங்களுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட அளவில் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அதன்பிறகு நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
அமெரிக்காவை பின்பற்றி ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன. இதனால் தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தங்களையும் பிரதிநிதிகளாக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இதனை ட்ரம்ப் விரும்பாத நிலையில் ஐரோப்பிய நாடுகள் செய்வதறியாது தவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி சமீபகாலமாக உலக அரசியலில் ஐரோப்பியா ஓரம்கட்டப்பட்டு வருகிறது. அது உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் உறுதியாகி உள்ளது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு