ஜனாதிபதியாக இருந்தபோது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விரைவில் வீடு திரும்புவார் என தான் எதிர்பார்ப்பதாகத் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது, நஷீட் அவருக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.