நேற்று வியாழக்கிழமை மாலை கொழும்பிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தலைமையில் சிறப்பு அரசியல் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமகால அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கலந்துரையாடலில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது
ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பி.திகாம்பரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
