முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அவரது கால்டன் இல்லத்தில் சந்தித்து சென்றமை தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்குமிடையில் சந்திப்பொன்று தங்கல்லை கால்டன் இல்லத்தில் இடம்பெற்றது. அங்கு நாங்கள் இருவரும் மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டருந்தோம்.
அரசியல் ரீதியில் நாங்கள் இருவரும் வேறு நிலைப்பாட்டை வகித்தபோதும் தேசியப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில் பரஸ்பர மரியாதையைப் பேணக்கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தின் சமகாலத்தவர்கள்.
அன்புக்குரிய ரணில் விக்ரமசிங்கவின் வருகை தொடர்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று மைத்திரி விக்ரமசிங்கவையும் மரியாதையுடன் நினைவு கூருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.