அவுவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனமான யுனைட்டட் பெற்றோலியம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ், மற்றும் அவஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனங்கள் இலங்கையில் செயல்பாடுகளைத் தொடங்கியது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நாட்டில் தலா 150 எரிபொருள் நிலையங்கள் என்ற வகையில் 450 எரிபொருள் நிலையங்களை இயக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் சுமார் 20 ஆண்டுகளுக்கு நாட்டில் எரிபொருள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும், ஒரு வருடத்திற்குள் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது.
அதன் ஊழியர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு