யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு வன்முறை ச்சம்பங்களும்,90 சட்ட விரோத மீறலும் நடைபெற்றுள்ளன. தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மே மாதம் 6திகதி நடைபெறவுள்ள உள்ளூ ராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் யாழ் மாவட்டத்தில் பூர்த்தியாகியுள்ளது யாழ்,மாநகர சபை,நகர சபைகள் 03 ,பிரதேச சபை 13 ஆக இணங்கலாக 17 சபைகளுக்கான தேர்தல் செயற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..243 வட்டாரங்களில் தேர்தல்கள் இடம்பெறயுள்ளது
3,519 உறுப்பினர்கள் அரசியல் கட்சி,சுயேட்சை குழுக்கள் இருந்து போட்டியிடுகின்றனர்.. யாழ் மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு செயற்பாடுகள் முன்னேடுக்கப்படுகின்றன.
4,98,140 பேர் வாக்களிக்கவுள்ளனர்.தேர்தல் கடமைக்கான 6,330 பேர்களும் ,1048 பொஸிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தபடஉள்ள னர்.
மே மாதம் 5 திகதி காலை 08 மணியில் இருந்து யாழ் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகள் உட்பட வாக்குச்சீட்டுகள் உள்ளிட்ட இதர ஆவணங்கள் போக்குவரத்து வாகனங்கள் மூலமாக கொண்டு செல்ல எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
517 வாக்களிப்பு நிலையங்கள் ஊடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலதிகமாக 243 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி சபைக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.இலங்கை போக்குவரத்து சபைக்கான 50 பஸ்களும், 143 தனியார் பஸ்களும் சேவையாற்ற உள்ளன.
பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள இடம்பெயர்ந்த வர் களை எற்றி வருதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ள ப் பட்டன…தீவக போக்குவரத்து தொடர்பாக கடற்படை தளபதியிடம் கேட்டு உள்ளோம்..நெடுந்தீவு,நயினாதீவு, அனலைதீவு,எழுவைதீவு பகுதிகளுக்கும் கடற்படையின் உதவியைக் கேட்டுள்ளோம் என்றார்.