யாழ்ப்பாண மாநகரசபையின் மேயர் பதவியை தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் கொடுத்துள்ளனர். மற்றைய கட்சிகள் அதனை அனுஸ்சரித்து அதற்கான ஆதரவினை தரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக்கட்சி 40 சபைகளிலே ஆட்சி செய்யத் தகுதி பெற்றுள்ளது. இது பெரிய வெற்றி வடக்கு,கிழக்கில் 58 உள்ளூராட்சி மன்ற சபைகளாக இருந்தால் 10 சபைகள் பெரும்பான் மையில்லாத நிலை இருக்கின்றது.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே இலங்கை தமிழரசு கட்சி மீது பெரிய நம்பிக்கை மக்கள் வைத்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலிலே தமிழரசு கட்சி மீது விம்பம் ஒன்று உருவாகியது. அந்த தேர்தலின் விளைவும் அதுதான் 25 சதவீதம் வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களிலே மூன்று ஆசனங்களைப் பெற்றது. இந்த மாற்றம் பாராளுமன்ற தேர்தலில் மாற்றம் வருவதாக சொன்னவர்கள் ஆறு மாதத்திலே அது இன்னும் மொரு மாற்றமாக வந்துள்ளது.அது வரவேற்க தக்க விடையம்.தமிழ் மக்களுடைய அடையாளம் எந்த காலத்திலும் விட்டுக்கொடுப்படமுடியாது.
நாங்கள் சபைகளை அமைக்கின்றபோது மற்றைய தமிழ் கட்சியுடன் பேசி சபைகளை அமைக்கமுடியும்.என்பதை நம்புகின்றோம்.உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களுக்கு உட்பட்ட விடையங்களை கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பாக 2018 ஆம் ஆண்டு சேர்ந்தே போட்டியிட்ட நாங்கள் 2025 ஆம் ஆண்டு தனியாக இலங்கை தமிழரசுக்கட்சி பெற்ற முடிவுகள் மேலானது
ஒரு கட்சியாக போட்டி போடுவதை தவிர்த்து ஒன்றே இருக்கின்ற கட்சிகள் தனித்தனித்து போட்டியிட்டு நிர்வாகமாக அமைப்பது சாத்தியமானது. கட்சியினையும்,கூட்டமைப்பினை உடைத்து விட்டோம் எனச் சொல்லும் கட்சிகளுக்கு நல்லபடிப்பினையை மக்கள் கொடுத்துள்ளனர்.ஜனநாயக கட்சியும்,ஏனைய கட்சியும் சேர்ந்து இயங்குகின்ற போது நிரந்தமான ஆட்சியினை அமைக்கமுடியும்.
மாநகர முதல்வரை யாரை நியமிப்பது என்று தீர்மானிக்கவில்லை என்றார்.