இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய கிளையின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட “பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மாற்றம்” என்ற தொனிப் பொருளிலான கருத்துப்பகிர்வு இன்று யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப் பாளர் த கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பீட தலைவி சட்டத்தரணி திருமதி கோசலை மதன், சட்டத்தரணி புராதனி ஆகியோர் கலந்து கருத்துரையாற்றினர்.