Monday, February 24, 2025 12:49 am
கொழும்பு, யாழ்ப்பாண இரயிலின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (22) கைது செய்தனர்.
கடந்த சில நாட்களாக அரியாலையில் ரயிலின் மீது கல் வீசும் சம்பவங்கள் நடை பெற்றன.கல் வீச்சு தாக்குதலில் இரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணி ஒருவர் காயமடைந்தார். இயில் நிலைய அதிபர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் இரயில் மீது கல் வீசுவதி பதிவாகி இருந்தது.
மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர்.

