Wednesday, June 18, 2025 10:06 am
யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா ,வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையேயான மரியாதை நிமிர்த்த சம்பிரதாயபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சந்திப்பின் போது புதிதாக மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டமைக்கு முதல்வரை ஆளுநர் வாழ்த்தி வரவேற்றார். மாநகரசபை தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மாநகரசபையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள், மாநகர மக்களுக்கான சுமூகமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் உள்ள சவால்கள்,மாநகரசபையின் முக்கிய தேவைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு சென்றார்.
ஆளுநர் பதிலளிக்கையில் முடியுமான முக்கிய விடயங்களை மாநகரத்தின் மக்களுக்கான சேவையின் அவசியம் கருதி நிறைவேற்றித்தர முயற்சிப்பதாகவும், அத்துடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் யாழ்ப்பாணம் நகர அபிவிருத்தி தொடர்பில் இணைந்து பணியாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாநகரத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் தனது முழுமையான ஒத்துழைப்புக்கள் என்றும் இருக்கும் என்றும் மேயர் குறிப்பிட்டார்.

