யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளை தலைமை யகத்தின் எற்பாட்டில் பெளர்ணமி வெசாக் தினம் 12 ஆம் திகதி ஸ்ரீ நாக விகாரையில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் தலைமையில் நடைபெற்றது
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். பெளத்த சிந்தனை பிரித்பாராயண அனுஷ்டனங்களைவிகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ நிகழ்த்தினர்.
இதனை தொடர்ந்து வெளிச்சகூடு, அலங்காரப்பந்தல் ஆகியவற்றுக்கான மின் ஒளிகதிர்களை நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அரம்பித்து வைத்தார். தமிழ்,பெளத்த பக்திபாடல்கள் இசைக்கப்பட்டன.
யாழ்ப்பாண பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோக னன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன்,இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்