யாழ்ப்பாணத்துக்கு இன்று சனிக்கிழமை (15) விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்று பாடசாலை அதிபருடனும்,மாணவர்களுடனும் உரையாடி பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்தார். அங்கிருந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்குச் சென்றார்.
சுழிபுரம், ஏழாலை , சண்டிலிப்பாய் ஆகிய இடங்களுக்கு இன்று மாலை செல்லும் பிரதமர் மக்களைச் சந்திப்பார்.
பிரதமர் ஹரிணி நாளை ஞாயிற்றுக்கிழமை [16) கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்வார்.