இலங்கை – கனடா வர்த்தக சம்மேளன த்தின் ஏற்பாட்டில் கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் இன்று ஆரம்பமானது.
கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா செல்லத்துரை, ம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் – எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்றும் நாளையும் இடமெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
