Tuesday, January 20, 2026 9:53 pm
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 23ம் திகதி சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி விடும் முயற்சியில் தமிழக பாஜக இறங்கியிருக்கிறது.சென்னைக்கு விஜயம் செய்யும் பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை அமமுக தலைவர் டிடிவி தினகரனையும், தேமுதிக தலைவர் பிரேமலதாவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேச்சுவார்த்தைக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர்கள் இணைவது உறுதியானால் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரேமலதாவும் ,டிடிவி தினகரனும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக, பாமக, தமாக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அதோடு சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் பாமகவையும் இந்த கூட்டணிக்குள் கொண்டுவந்தார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியை தனியரசு சந்தித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, ஜிகே வாசன், ஏசி சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் ஏற்கனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகியிருக்கிறது. அதேபோல் பேச்சுவார்த்தை சரியாக நடந்து முடிந்தால் பிரேமலதா, டிடிவி தினகரன் ஆகியோரும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.

