இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக ஏப்ரல் 4 முதல் 6 வரை கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள சில வீதிகள் மூடபப்ட உள்ளதாகவும், பொதுமக்கள் அஒத்துழைக்க வேண்டும் எனவும் பொலிஸர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ,பேஸ்லைன் வீத் ஆகியன இன்று வெள்ளிக்கிழமை 4) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அவ்வப்போது மூடப்படும். நாளை சனிக்கிழமை (5), காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் ,பத்தரமுல்லையில் உள்ள “அபே காமா” ஆகிய வீதிகளும் தற்காலிகமாக மூடப்படலாம்
சிறப்பு போக்குவரத்து ,பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளதால் ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக தெரு நாய்களும், பிச்சைக்காரர்களும் பகுதிகளிலிருந்து அகற்றப்படுவார்கள் என்ற சமூக ஊடக அறிக்கைகளை பொலிஸார் மறுத்துள்ளனர். அத்தகைய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த தவறான கூற்றுகளின் மூலத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.