Wednesday, February 11, 2026 10:57 pm
மெக்சிகோ போதைப் பொருள் கும்பலின் ட்ரோன்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக அமெரிக்கா பரபர அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதனால் மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள எல் பாசோ சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியை 10 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்துள்ளது.
மெக்சிகோ போதைப் பொருள் கும்பலுக்குச் சொந்தமான ட்ரோன் ஒன்று அமெரிக்காவில் நுழைந்ததாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பாசோ சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியை 10 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவித்தது.
அமெரிக்காவில் மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களில் விமானப் போக்குவரத்து மிக முக்கியமானதாக இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பியது. இதனால் எங்கு டெக்சாஸ் சர்வதேச விமான நிலையத்தை அடுத்த 10 நாட்களுக்குப் பயன்படுத்தவே முடியாதோ என்று மக்கள் அஞ்சினர். இதற்கிடையே தடை அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு அறிவிப்பும் வந்தது. அதில் ஏர் ஸ்பேஸ் மீண்டும் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

