2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணா, வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லியில் தரையிறங்கினார்.
டெல்லியின் பாலம் விமான நிலையத்தில் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வாகனத்தில் ராணாவை தேசிய புலனாய்வு அமைப்பின்(NIA) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார், அங்கு உயர் பாதுகாப்பு விசாரணை அறை தயார் செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் 166 பேர் கொல்லப்பட்ட 26/11 தாக்குதலில் ராணாவின் பங்கு குறித்து 16 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் விசாரணையை எதிர்கொள்ள உள்ளார்.