முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக செய்யும் எந்தவொரு கோரிக்கையையும் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதிகளின் உருத்துரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் வீடுகள் ,வாகனங்கள் போன்ற பல சலுகைகளை நீக்கியிருந்தாலும், பாதுகாப்பு விதிகள் சட்டத்தின் கீழ் வராது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
“சில முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைத் திருப்பித் தந்துள்ளனர், ஆனால் அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பிற்கு உறுதிபூண்டுள்ளது,” என்று விஜேபால கூறினார், பாதுகாப்பு அல்லது தொடர்புடைய வசதிகளுக்கான எந்தவொரு கோரிக்கையும் முறையாக பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.