கிறிக்கெற்றில் பல சாதனைகள் செய்த முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மாஸ்டர்ஸ் , இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 6 அணிகள் மோத உள்ளன. மார்ச் 16 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய அணி தலைவராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு குமார சங்ககரா, மேற்கிந்திய தீவு அணிக்கு பிரையன் லாரா, இங்கிலாந்து அணிக்கு இயான் மார்கன், தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாண்டி ரோட்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Trending
- 4600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றம் – நளிந்தஜெயதிஸ்ஸ தெரிவிப்பு
- ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
- பதுளையில் தம்பியை வாளால் வெட்டிய சம்பவம்
- வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜரானார் கெஹெலியவின் மகன்
- மூன்று வாகனங்கள் மோதியதில் 7 பேர் காயம்
- கடற்படைத் தளபதியுடன் இஸ்ரேல் தூதரக அதிகாரி பேச்சுவார்த்தை
- துணை மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம்