Monday, May 26, 2025 7:45 am
முந்தைய நிர்வாகத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டது.
இன்று காலை வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு மற்றும் பிரதிவாதிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

