நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ் பட்லர் 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா அறிமுக வீரர் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தடிய இந்தியா 38 ஓவர்களில் 6 விக்கெஏகளை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது கப்டன் ரோகித் சர்மா 2 ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ஓட்டங்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 , அக்சர் பட்டேல் 52 ஓட்டங்கள் அடித்தனர்.
சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். , இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் திகதி நடைபெற உள்ளது.
Trending
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை
- ஆசிய-பசிபிக் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 6 பதக்கங்கள்
- அமெரிக்க புதிய வரிகள் தொடர்பில் விஜித ஹெரத் அமெரிக்க தூதருடன் கலந்துரையாடல்