ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் வைபவம்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி இதில் கலந்து கொண்டார்.
அங்கு உரையாற்றிய சவூதி அரேபியத் தூதுவர் யாத்திரிகர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு மற்றும் ஆன்மீக பயணத்தின் நிறைவை உறுதி செய்வதற்கான சவூதி அரேபியாவின் விரிவான பங்களிப்பை எடுத்துரைத்தார்.
தேசிய ஒருமைப்பாடு பிரதியமைச்சர் முனீர் முலாஃபர், மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், இலங்கை ஹஜ் குழுத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.