கச்சதீவுக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தான்டியதாகக்கூறி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடற்பட்டையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மூன்று மீனவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை 13 மீனவர்களையும் படகுகளுடன் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்ச்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எத்தகைய சூழலிலும் இலங்கை படை பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனவும் வாழ்வாதார பிரச்சனை என்பதால் மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு காயமடைந்த மீனவர்களிடம் இந்திய துணை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசுக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை