இலங்கை தமிழர் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றவும், அரசியலமைப்பு விதிகளை முழுமையாக செயல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்தவும் ஜனாதிபதி அனுர குமார திசநாயகவிடம் இந்தியப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கை ஜனாஅதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்காக 10,000 வீடுகள் கட்டும் பணி விரைவில் நிறைவடையும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இரு நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த பிரச்சினையில் இந்தியாவும் இலங்கையும் மனிதாபிமான அணுகுமுறையை பின்பற்ற ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.கைது செய்யப்படும் மீனவர்களை விரைவாக விடுவித்து படகுகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக 11 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு சிறையிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.