மிஸ் வேர்லட் கால் இறுதிப் போட்டிக்கு 14 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 26 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
காலிறுதிக்கு வரும் 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் மிஸ் வேர்ல்ட் கிரீடத்திற்காக போட்டியிடுவார்கள்.
இதுவரை, ஸ்போர்ட்ஸ் சலஞ்ச் ,டேலண்ட் சலஞ்சில் இருந்து தலா ஒரு போட்டியாளர், ஹெட்-டு-ஹெட் சேலஞ்சில் இருந்து நான்கு பேர், டாப் மாடல் போட்டியில் இருந்து நான்கு பேர் , பியூட்டி வித் எ பர்பஸ் பிரிவில் இருந்து நான்கு பேர் – மொத்தம் 14 வெற்றியாளர்கள் – காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர்.
மீதமுள்ள 26 போட்டியாளர்கள் அமெரிக்கா-கரீபியன், ஆப்பிரிக்கா, ஐரோப்பா,ஆசியா-ஓசியானியா கண்டங்களைச் சேர்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அடுத்த சுற்றில், முதல் 20 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் – ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஐந்து பேர். இறுதிப் போட்டிக்கு முன், ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் இரண்டு பேர் வீதம் முதல் 8 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,
இறுதியாக, ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு போட்டியாளர் மட்டுமே – மொத்தம் நான்கு பேர் – கிரீடத்திற்காக போட்டியிடுவார்கள். அவர்களில், ஒருவர் வெற்றியாளராக முடிசூட்டப்படுவார், மற்ற மூவர் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது ரன்னர்-அப் என்று பெயரிடப்படுவார்கள்.