மியான்மரில் புத்த திருவிழாவின் போது பாராக்ளைடர் மூலமாக குண்டு வீச்சு நடைபெற்றதில் 24 பேர் பலியானார்கள்.
மத்திய மியான்மரில் தாடிங்யுட் என்ற புத்த திருவிழாவிற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை கொண்டாட ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது பாராகிளைடர் மூலம் இயக்கப்படும் வெடிக்குண்டுகள் அந்த கூட்டத்தில் வீசப்பட்டதில், குண்டு வெடித்து 24 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து நீண்ட காலமாக இராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் டிசம்பரில் மக்களாட்சியை கொண்டு வர தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.