நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை திங்கட்கிழமை (10) வெளியிடும் என்று அதன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு ஊடாக விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சும் மின்தடை பற்றிய விரிவான விசாரணையை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
இதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது, இறுதியாக 2023 டிசம்பர் 9ஆம் திகதி மின்வெட்டு ஏற்பட்டது, மேலும் மின்சாரத்தை மீட்டெடுக்க சுமார் 6 மணிநேரம் சென்றது.
இதேபோன்று, 2016 மார்ச், 2020 ஓகஸ்ட்டிலும் , 2021 டிசம்பரிலும் மின்சாரம் நாடளாவியரீதியில் துண்டிக்கப்பட்டது.
Trending
- பாடசாலைகளில் தண்ணீர் பயன்படுத்தும் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மரணம்
- காற்றாலை மின் திட்ட்டத்தால் பறவைகளுக்கு அச்சுறுத்தல் இல்லை எரிசக்தி அமைச்சர்
- 155 பஸ் சேவை மீண்டும் தொடங்கியது
- 40,000 பட்டதாரிகள் இன்னும் வேலையில்லாமல் உள்ளனர் – சஜித்
- ஆணைக்குழுவின் தலைவராக ஊடகவியலாளர் தயா லங்காபுர
- எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
- வீடற்ற மக்கள் வாஷிங்டனை விட்டு ‘உடனடியாக’ வெளியேற வேண்டும்: ட்ரம்ப்