மின்வெட்டு காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை இலங்கை மின்சார சபை மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு நிறுவன உரிமையாளர்கள் சங்கம்/சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் சங்க தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதற்கு இலங்கை மின்சார சபை பலமுறை தவறியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடையால் ஆறு முதல் ஏழு மணித்தியாலங்களுக்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது., இதன் விளைவாக சிறுதொழில்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
“நாங்கள் மின்சாரத்தையே பெரிதும் நம்பியுள்ளோம். எனவே, பெப்ரவரி 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை எமக்கு கணிசமான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பை மதிப்பீடு செய்து நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குமாறு நாம் மின்சார சபையை வலியுறுத்துகிறோம். சட்டங்களின்படி, அத்தகைய இழப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்,” என்றார்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு