இந்திய விமானப்படையில் முக்கிய, பல போர்களின் நாயகனாக விளங்கிய MiG-21 ரக போர் விமானங்கள், 62 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றன. நாட்டின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானம் என்ற பெருமைக்குரிய இந்த விமானங்களுக்கு, சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பிரமாண்டமான பிரியாவிடை விழா நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
1963-ல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டMiG-21 விமானங்கள், இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கியுள்ளது.1965 ஆம் ஆண்டும், 1971 ஆண்டும் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்களிலும், 1999 கார்கில் போரிலும் MiG-21முக்கிய பங்கு வகுத்திருக்கிறது. குறிப்பாக 2019-ல் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறது.
பல தசாப்தங்களாக இந்திய விமானப்படையின் பலமாக இருந்த இந்த விமான ரகங்கள், அதன் இறுதிக்காலத்தில் அடிக்கடி நடந்த விபத்துக்களால் Flying Coffin என்ற மோசமான பெயரையும் பெற்றது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் நடந்த விபத்தைத் தொடர்ந்து இந்த ரக விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாகத் தரை இறக்கப்பட்டன. MiG-21 விமானங்களின் ஓய்வால், இந்திய விமானப்படையில் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 42-ல் இருந்து 29 ஆகக் குறைந்துள்ளது என்பதும்