Sunday, September 14, 2025 3:11 pm
குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினர்.

