மருத்துவ அதிகாரிகள் , நிபுணர்கள் ஆகியோர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும்பட்ஜெட்டில் இல்லை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியது.
மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் இடம்பெயர்வு என்பது சமீப காலங்களில் அதிக விவாதத்திற்கு உட்பட்ட ஒரு பிரச்சினையாகும்.
சுகாதாரத் துறை நிபுணர்களின் இடம்பெயர்வைக் குறைக்க உதவும் சில கொள்கைகளைச் சேர்க்குமாறு சுகாதார அமைச்சகம் உட்பட தொடர்புடைய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்ததாக மருத்துவ அதிகாரிகள் சங்க செய்தித் தொடர்பாளர் டாக்டர் சமில் விஜேசிங்க, கூறினார்.
“நாங்கள் பல முறை கோரிக்கைகளை வைத்தோம். இருப்பினும், அவர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்ள பட்ஜெட் எந்த திட்டத்தையும் முன்மொழியவில்லை,” என்றும் அவர் கூறினார்.