2025 பட்ஜெட் மாற்றங்கள் மருத்துவர்களால் பெறப்பட்ட கொடுப்பனவுகளில் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தாக்கத்தை மதிப்பாய்வு செய்து முடிவை அறிவிக்க அரசு சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளது.
2025 பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக மருத்துவர்கள் , செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்களுக்கான பல கொடுப்பனவுகள் குறைக்கப்படும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தை விவாதிக்க ஜனாதிபதியும் ,யையும், நிதி அமைச்ருமான அனுர குமார திசாநாயக்கவை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சந்தித்தது.
ஜனாதிபதியிடமிருந்து திட்டவட்டமான பதில் கிடைக்கவில்லை. . ஜனாதிபதியும் மற்ற அரசாங்க பிரதிநிதிகளும் இந்த விஷயத்தை மதிப்பாய்வு செய்து முடிவெடுக்க சில நாட்கள் அவகாசம் கேட்டனர். எங்களுக்கு விரைவில் பதில் தேவை என்று அவர்களிடம் தெரிவித்தோம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றுதிங்கட்கிழமை (3) அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அப்போது இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.