ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளத்தை ஊனமுற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
காபூல் நகர மையத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள இந்தக்கட்டடம் சர்தார் முகமது தாவூத் கான் மருத்துவமனை என்று அழைக்கப்படும் 400 படுக்கைகள் கொண்ட பிரதான ஆப்கானிய இராணுவ மருத்துவமனையுடன் வியாழக்கிழமை முறையாக இணைக்கப்பட்டது.