Sunday, January 25, 2026 8:22 pm
குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதைப் பெறுபவர்கள் பட்டியலை உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொதுச் சேவை போன்ற துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இந்த விருதுகள்
கடந்த ஆண்டு நவம்பர் 24 அன்று தனது 89 வயதில் காலமான மூத்த நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு, மறைவுக்குப் பிந்தைய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் மம்முட்டி ,பாலிவுட் பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவன், பெங்காலி ஜாம்பவான் புரோசென்ஜித் சாட்டர்ஜி, மூத்த தொலைக்காட்சி, திரைப்பட நடிகர் சதீஷ் ஷா (மறைவுக்குப் பின்) ஆகியோருக்குப் பத்மஸ்ரீ வழங்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விருது பெறுநர்களின் பெயர்கள் குடியரசு தினத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு இறுதியில் டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பதக்கங்களை வழங்குவார்.

