மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் ,மன்னர் மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தை மன்னர் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது தொழிற்சந்தை இதுவாகும் மன்னார் மாவட்ட தொழில் நிலையத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற தொழில் சந்தையில் 40க்கும் மேற்பட்ட தொழில் வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்றன தொழில் சந்தைக்கான அனுசரணையை அட்ரர் நிறுவனம் வழங்கியிருக்கிறது மன்னார் மாவட்ட செயலாளர் க. கனகஸ்வரன் தொழிற்சந்தையை ஆரம்பித்து வைத்தார் 1000க்கும் மேற்பட்ட யுவதிகள் இதில் கலந்துகொண்டனர்.