Friday, February 20, 2026 8:42 pm
தலிபான் அரசு கொண்டுள்ள புதிய சட்டம் அந்நாட்டுப் பெண்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. புதிய சட்டத்தின்படி கணவர் தங்களின் மனைவியையும், குழந்தைகளையும் உடல் ரீதியாக தண்டிக்கலாம்.. ஆனால் எலும்புகள் உடையாமல் இருக்க வேண்டும் அல்லது கடுமையான காயங்கள் ஏற்படாமல் அடிக்க வேண்டும்.
பெண்களை பாதுகாக்கும் முந்தைய சட்டங்களையும் தற்போது தலிபான் அரசு இரத்து செய்திருக்கிறது. ஒருவர் தனது மனைவியை கடுமையாக தாக்கி எலும்பை உடைத்தாலோ அல்லது காயத்தை ஏற்படுத்தினாலோ கணவருக்கு 15 நாட்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தனது உறவினர்களை பார்க்கச் சென்றால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைதண்டனை வழங்கப்படும் என சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.. இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என ஆப்கானிய மனித உரிமை அமைப்பு கோரிகை வைத்திருக்கிறது.

